தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்

665

தமிழ்நாடு காவல்துறையின் வீரத்தியாகிகள் புத்தக வெளியீடு மற்றும் 6,119 சீருடைப் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவலர் பணிக்கென பணி நியமன ஆணைகள் வழங்குவதையும், வீரத் தியாகிகள் என்ற புத்தகம் வெளியிட தலைமை தாங்குவதிலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, மக்கள் நலனிற்காக உயிர் நீத்த தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரின் தியாகத்தை அங்கீகரித்து, அவர்கள் புரிந்த வீர, தீரச் செயல்களை சித்தரித்துள்ள வீரத் தியாகிகள் என்ற புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் உட்பட 6,119 பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைசெயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of