காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படை

104

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலால் அங்கு முகாமிட்டு அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், திடீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பதிலடி தரப்பட்டு வருகிறது. வதந்திகள் பரவிவிட கூடாது என்பதற்காக காலை முதல் மொபைல் இன்டர்நெட் சேவையும் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த தேடுதல் வேட்டையில், ராஷ்டீரிய ரைபிள்ஸ், மாநில காவல் துறையின் சிறப்பு அதிரடி படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் இணைந்து கூட்டாக ஈடுபட்டு உள்ளனர்.

2 முதல் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது. வன்முறை பரவிடாமல் தடுக்கும் வகையில் அருகிலுள்ள கிராமங்களில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.