மாவோயிஸ்டுகள் என நினைத்து 2 விவசாயிகளுக்கு என்கவுன்டர்

180

ஆந்திராவின் பெத்தபாயலு மண்டலம், புரதமாகிடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பூஷணம்,  ஜமான் இருவரும் தங்களது விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன்  நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர்.ஒடிசா எல்லைக் கிராமமான புரதபல் மாகிடியில் சிஆர்பிஎப் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் என்று நினைத்து 2 விவசாயிகளையும் போலீசார்  என்கவுன்டர் செய்து சுட்டுக்  கொன்றனர்.

நேற்று பாடேரு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவோயிஸ்டுகளுக்கும் மலைவாழ் விவசாயிகளுக்கும் வித்தியாசம் தெரியாதா என ஆவேசமாக கேட்டனர்.