ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

400

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சிதம்பரத்திடம் சில ஆவணங்களை காட்டி விசாரிக்க வேண்டியுள்ளதால், இரண்டு நாட்கள், அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது.

அமலாக்கத்துறையின் முறையீட்டை ஏற்ற டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

நாளையும் நாளை மறுநாளும், திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of