சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

1256

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார்.

4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தி கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிவக்குமார் அவரது மகள் ஐஸ்வர்யா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கியதாகவும் பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நாளை (செப்.12) விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of