“ஒரே சண்டையில் உலக பேமஸ்..” பிச்சைக்காரர் எழுதிக்கொடுத்த புகார் கடிதம்..! அதிர்ந்த போலீசார்..!

569

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள பிரசித்த பெற்ற கோயில் வளாகத்தில் பிச்சை எடுத்து வருபவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா. எப்போதுமே அமைதியாக இருக்கும் இந்த நபர், யாரிடமும் பேச மாட்டாராம். அந்த கோயில் வளாகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் எப்போதுமே அமர்ந்துக்கொண்டு பிச்சை எடுத்து வருவாராம்.

இந்நிலையில் அவர் பிச்சை எடுக்கும் இடத்தில் ரிக்ஷாக்காரர் தனது ரிக்ஷாவை நிறுத்தியுள்ளார். இதனால், மிஸ்ராவுக்கும், ரிக்ஷாக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில், ரிக்ஷாக்காரரை மிஸ்ரா கடுமையாக தாக்கியதில் பொலபொலவென ரத்தம் வரத்தொடங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரண்டு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு புகார் எழுதி தருமாறு இருவரிடமும் காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போதுதான், கிரிஜா சங்கர், அந்த பேப்பரில் கடகடவென இங்கிலீஷில் புகார் எழுதினார்.. சரளமாகவும், வேகமாகவும் அந்த புகாரை எழுதி தள்ளினார். இதை பார்த்து போலீசார் அரண்டு போய்விட்டனர்.. அதன்பிறகு மிஸ்ராவை போலீசார் விசாரித்தனர்.

அப்போது தான், அவர் புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பியின் மகன் என்பதும், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்த பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும், தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருக்கும் பிற பணியாளர்களுடன் தகராறு ஏற்படும். மனசெல்லாம் வலி.. அதான் அந்த வேலையை விட்டுட்டு வந்துட்டேன்.. இன்னும் என் மனசு ரணமாதான் இருக்கு என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து இவர் எப்படி இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளமையில் கற்ற கல்வி ஒருவரை எப்போதுமே கைவிடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி வைத்தது, கிரிஜா சங்கர் விஷயத்தில் எவ்வளவு பெரிய உண்மை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of