பிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

239

உலகக் கோப்பை தொடரில் பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. ’டை’ ஆன இந்தப் போட்டியில் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.சூப்பர் ஓவரும் டை ஆனதால் புதுமையாக அதிக பவுண்டரி கள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உலகக் கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது இங்கிலாந்து அணி.இதைக் கொண்டாடி வரும் அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிரதமர் தெரசா மேயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். போட்டியில் வென்ற உலக கோப்பையை கையில் ஏந்தியவாறு தெரசா மேவுடன் அப்போது அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of