மெக்கா செல்லும் இங்கிலாந்து நாட்டினர்…! எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து…!

581

ஆண்டுதோறும் பக்ரித் திருநாளான்று, உலக முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், புனித யாத்திரையாக மெக்கா, மதீனா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பக்ரித் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகளின் கறந்த பாலில் இருந்து மெர்ஸ் எனப்படும் புதிய வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள், சவுதி அரேபியா செல்லும்போது, ஒட்டகப்பாலை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2012 முதல் 2 ஆயிரத்து 500 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 845 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Advertisement