இங்கிலாந்திற்கு எதிரான போட்டி : தடுமாறும் ஆஸ்திரேலியா..! -இறுதி போட்டிக்குள் நுழையுமா?

352

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான போட்டி இன்று பெட்ஜாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய முதலே  ஆஸ்திரேலியா அணிக்கு சறுக்கலாகவே காணப்படுகிறது.

 முதல் ஓவரிலேயே விக்கெட்டை  பறிகொடுக்கத் தொடங்கிய ஆஸ்திரேலியா ரன்கள் எடுப்பதில் போராடி வருகிறது. தற்பொழுது 12 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

தொடர்ந்து ரன்களை எடுக்க போராடிவரும் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி ரன்களை எடுக்குமா என்பது முதல் பகுதி ஆட்டம் முடிவில் தெரிந்துவிடும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு அதே வலிமை இருந்தாலும் இங்கிலாந்துடன் விளையாடுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. இதனால் எந்த அணி இறுதி போட்டிக்கு செல்லும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of