என்னடா இது வெஸ்ட் இண்டீஸ்-க்கு வந்த சோதனை..,

374

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சாம்பில்லிங்ஸ் 47 பந்தில் 87 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோ ரூட் 40 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்த வீச்சால் விக்கெட்டுகளை மளமள என்று இழந்தது. அந்த அணி 11.5 ஓவரில் 45 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மயர், பிராத் வெயிட் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். ஜோர்டான் 4 விக்கெட்டுட் வில்லி, ஆதில் ரஷீத், புளுனகெட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் 2-வது குறைந்த பட்சஸ்கோர் இதுவாகும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of