அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

4096

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளிலிருந்து 600 பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் பேசிய அவர், டிசம்பர் மாத இறுதிக்குள் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாணவர்கள் புதிய பாடத்திட்டங்களை யூடியூபில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement