சட்டப்பேரவையில் திமிறிய திமுக – கொந்தளித்த EPS-OPS

592

தமிழக அரசிற்கு மத்திய அரசிடம் நிதியை கேட்டுப்பெறுங்கள் என்ற திமுக வின் விமரசனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசு மத்திய அரசிடம் அடிபணிந்துள்ளதாகவும் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை முறையாக கேட்பதில்லை எனவும் திமுகவினர் தொடர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழக அரசிற்கு தேவையான நிதியை முதல்வர் முறையாக கேட்டுப்பெறுங்கள் என கூறினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்க வேண்டியதை தைரியமாக கேட்கிறோம்.

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தைரியத்தோடு கேட்டுப்பெறுகிற அரசுதான் தற்பொழுது ஆட்சி செய்து வருகிறது.

மத்தியில் எந்த கட்சி வந்தாலும் தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை எனவும், ஆனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் நிதிகளை கேட்டுப் பெறுகிறது என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக அரசை விமர்சிப்பவர்கள் சற்று திரும்பி பாருங்கள். என கூறிய அவர், காங்கிரஸிடம் திமுக இதுவரை அடிமையாக தான் உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இப்படி விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது அவைக்கு உகந்தது அல்ல என அதிருப்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடந்த இத்தகைய காரசார விவாதத்தால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of