சோதனைச்சாவடியில் ஒன்றரை கோடி..! போலீஸ் பறிமுதல்

243

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சோதனைச்சாவடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆசனூர் சோதனைச்சாவடியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது புனேவில் இருந்து மைசூர் வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி 1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கார் உரிமையாளர் உட்பட இருவரையும் பிடித்து ஆசனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் விசராணையில் பைஜூ என்பவர் புனேவில் வேலை செய்து வருவதாகவும், கேரளாவில் இடம் வாங்குவதற்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of