எத்தியோப்பியாவில் விமானங்கள் தரையிறக்கம்

237

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான  போயிங் 737 மேக்ஸ்-8 விமானம்  நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.இதில் விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது.

 

எனவே போயிங் 737 மேக்ஸ்-8  ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அதன்படி விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியாத நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களை தரையிறக்க முடிவு செய்திருப்பதாகவும் மறு உத்தரவு வரும் வரை இந்த விமானங்களை இயக்கக்கூடாது என விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேபோல் சீனாவிலும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு வர்த்தகரீதியிலான சேவை  நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of