CAA விவகாரம்: இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி-க்கள் தீர்மானம்..!

1188

பிரசல்ஸ் நகரில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் 150-க்கும் மேற்பட்டோர் 5 பக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த தீர்மானத்தில், இந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காக உருவாக்கி உள்ளது.

அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டால், ஏராளமானவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். குடியுரிமை தொடர்பான சர்வதேச கடமைகளை மீறும் வகையில் இந்தியா இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இந்த சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சமானது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஐரோப்பிய யூனியன் தலையிட்டு மனித உரிமைகளை காப்பதுடன், இந்த சட்டத்தை நிறுத்திவைக்க செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of