நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் என்கவுண்டர்தான் – சீமான்

509

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இன்று காலை என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர்.

இதற்கு நாடு முழுவதும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடி வந்தனர். மேலும் பெண்கள் மற்றும் ஆண்கள்,அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

அதில் பெரும்பாலன நபர்கள் இது மாதிரியான தண்டனைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். தெலுங்கானா மக்கள் அப்பகுதி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்ததுடன் பூக்களை தூவி அவர்களை வரவேற்றனர்.

இதற்கிடையே  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். சீமான் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது தெலுங்கானா சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்த என்கவுண்டரை நான் வரவேற்கிறேன். பெண்களை ஒரு போகப்பொருளாக நினைத்த சிலர் செயலுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை இருக்க முடியாது.

இதே போல் பொள்ளாச்சியில் நடந்த குற்றத்தில் ஈடுப்பட்டவர்களை 90 நாள்களில் குண்டாஸ் சட்டத்தில் ரத்து செய்து  வெளியில் விட்டதெல்லாம் பெரிய கொடுமை. இது வரலாற்று பெரும்பிழை.

அங்கே பாலியல் வன்கொடுமை நடக்கிறதோ அதே இடத்தில் வைத்து மக்கள் மத்தியில் குற்றவாளிகளை சுட்டால் தான் அனைவருக்கும் பயம் வரும். மரணம் ஒன்று தான் இவர்களை ஒழுங்காக நடத்தும்.

இல்லையென்றால் 90 நாள்களில் வெளியே வந்து விடலாம்,எந்த குற்றமும் செய்யலாம், மக்கள் பணத்தில் சிறையில் உள்ளே சாப்பிடலாம் என நினைப்பார்கள். எனவே அச்சுறுத்தும் தண்டனை தர வேண்டும்.

அதனால் தெலுங்கானா போலீஸ் செயலை முழுவதுமாக வரவேற்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதை தான் செய்வோம் அதாவது என்கவுண்டர் தான். குற்றத்துக்கு ஒரே தண்டனை இது  ஒன்று தான். என்று பேசினார்.

Advertisement