இந்தியாவில் இரண்டு நிமிடத்திற்கு, மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

668

இந்தியாவில் இரண்டு நிமிடத்திற்கு, மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், சர்வதேச அளவில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 முதல்14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு மற்றும் அதற்கான காரணம் குறித்த ஆய்வறிக்கையை ஐ.நா. ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டு வருகிறது.

இந்த ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட, 2017ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில், சர்வதேச அளவில், பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பில், சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளன.

ஆப்ரிக்க நாடான நைஜீரியா மற்றும் பாகிஸ்தான், மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில், 2016ஆம் ஆண்டில், 8.67 லட்சம் பச்சிளம் குழந்தைகளும், 2017ஆம் ஆண்டில் 8.02 லட்சம் பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சுத்தமான குடிநீர், சுகாதாரம், முறையான ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை சுகாதார சேவைகள் இல்லாதததே குழந்தைகள் இறப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டச்சத்து பிரச்சாரம் மற்றும் வீடுகளில் கழிப்பறை அமைக்கும் திட்டங்கள் போன்றவை குழந்தைகள் இறப்பை குறைக்க உதவும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர், ககன் குப்தா தெரிவித்துள்ளார்.