புகையிரத நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பெயர் ?

192
karunanithi7.3.19

தமிழ்நாட்டுக்கு இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முக அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு நன்றி.

இதேபோல், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.