ஏழு பேரின் விடுதலை தவறான முன்னுதாரணமாகிவிடும்! திருநாவுக்கரசர் கருத்து!

596

1991 ஆம் ஆண்டு ஸ்ரீ-பெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய ஏழுப் பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றது.

இதையடுத்து அவர்கள் ஏழு பேரும் 27 ஆண்டுகளை சிறையில் வாழ்ந்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது பின்வருமாறு:-

“ஏழு பேரைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதுவேக் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.