முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி மறைவு திமுக-வுக்கு பேரிழப்பு- ஸ்டாலின்

676

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த வசந்தி ஸ்டான்லியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தி ஸ்டான்லியின் மறைவு பற்றி பேசிய ஸ்டாலின் கவிஞர், எழுத்தாளர், திமுக பேச்சாளராக விளங்கியவர் வசந்தி ஸ்டான்லிவசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி, தி.மு.க-வுக்கும் இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் செயல் வீராங்கனையாக இருந்தவரின் மறைவால் துயரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வசந்தி ஸ்டான்லியின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்திலும் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் தலைவர் கலைஞர் அவர்களால் ‘கழகத்தின் கருவூலம்’ என பாராட்டப்பட்ட, முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி அவர்களின் திடீர் மறைவுச்செய்தி என்னை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கழக செயல் வீராங்கனையாக திகழ்ந்த அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வசந்தி ஸ்டான்லி நேற்றிரவு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of