மோடிக்கு எதிராக களமிறங்கும் ராணுவ வீரர்?

1007

ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேஜ்பகதூர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது காணொளி ஒன்றை வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளானார்.

விதிமுறைகளை மீறி காணொளி வெளியிட்டதாக தேஜ் பகதூர் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு பணிநீக்கம் செய்தது.

இந்நிலையில், தற்போது தேஜ் பகதூர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்குவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வாரணாசியில் உள்ள நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் தன்னிடம் தொடர்பில் இருக்கின்றனர். வாரணாசி தொகுதி வாக்காளர் பட்டியலில் எனது பெயரையும் இனைத்துள்ளேன்.

கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்காகத் தயாராகி வருகிறேன். ஊழல் பிரச்னையை மையப்படுத்தியே இத்தேர்தலை சந்திக்கப் போகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of