கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதால் காவலர் எழுத்து தேர்வு ரத்து

319

குஜராத் மாநிலத்தில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதால் காவலர் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் காவல் துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கேள்வித்தாள் வெளியான தகவல் தெரியவந்தது. இதையடுத்து, காவலர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கேள்வித்தாள் வெளியானது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறைக்கு முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார். நீண்ட தூரத்தில் இருந்து தேர்வு எழுத வந்தவர்கள், தேர்வு ரத்தானதை அறிந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of