பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் தொடங்கப்படும்

212

தமிழகத்தில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் தொடங்கப்படும் – செங்கோட்டையன்.

தமிழகத்தில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் வரும்19ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆய்வு நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிதாக துவங்க உள்ள LKG, UKG வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள நீதிபோதனை வகுப்புகள் தொடங்கப்படும் என்றார்.