நீலகிரியில் சிறுத்தை, ஆட்டை கடித்து வேட்டையாடும் பிரத்தியேக காட்சி

868
Leopard - sheep

நீலகிரி மாவட்டம், உதகையில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, பாறைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, கால்நடைகளையும் தாக்குகின்றன. இந்நிலையில், உதகை அருகே நொண்டிமேடு பேங்காலனி பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகள் விடப்பட்டிருந்தன.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்து, ஆட்டை கவ்வி இழுத்து சென்று பாறைக்குள் மறைந்தது. இதனை கண்ட மற்ற ஆடுகள் அங்கிருந்து சிதறி ஒடின. இதனால், பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement