காங்கிரஸ், பாஜகவினரிடையே கடும் இழுபறி – 5 மாநில தேர்தல் எக்சிட் போல் முடிவுகள்

1101

ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலத்திலும தேர்தல் முடிந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் செவ்வாய்கிழமை காலை 7 மணி முதல் எண்ணப்படுகிறது. நண்பகல் 12 மணியளவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என தெரியவரும். சத்தியம் தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகள் தொடர்பான சிறப்பு நேரலை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளால் வெளியிடப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே கணிப்பில் இழுபறி என்றும், டைம்ஸ் நவ் கணிப்பில் பாஜக வெற்றி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில், பாஜக வெற்றி பெறும் என்றும், இந்தியா டி.வி நியூஸ் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், இந்தியா டுடே காங்கிரஸ், பாஜக இடையே கடும் இழுபறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ரிப்பளிக் சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நியூஸ் Nation, இந்தியா டூடே, டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெரும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 105 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு 85 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடஙகளும் சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ், ரிப்பளிக் டிவி, உள்ளிட்ட தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சராசரியாக 33 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜக 2 அல்லது 3 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் பெரும்பானமை பலம் பெற 46 இடங்கள் வேண்டும். சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவுக்கு 46 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. அதேபோல் ரிபப்ளிக் மற்றும் இந்தியா டுடே ஆகியவை பெரும் இழுபறி ஏற்படும் என கூறியுள்ளது.

40 தொகுதிகள் கொண்ட மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 14 முதல் 18 இடங்கள் கிடைக்கும் என்றும் மிசோ தேசிய முன்னணிக்கு 16 முதல் 20 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் கிடைக்கம் என்றும் மிசோ தேசிய முன்னணிக்கு 18 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்றவர்களுக்கு 6 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது.

Advertisement