கேபிள் டிவி புதிய கட்டண முறை இப்போது அமலுக்கு வராது- டிராய்

234

கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை அமல் படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்காந கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.