பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..

217

வைரஸ் தொற்று பரவலால், கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இதன்காரணமாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் அனைத்து விதமான கடைகளையும் திறந்து வைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்த அரசு, பெட்ரோல் பங்குகளை 8 மணி வரை திறந்து வைக்கலாம் என்று கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் பங்குகளை திறப்பதற்கான கால அளவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் இனி திறந்திருக்கலாம்.