கேபிள் டிவி புதிய கட்டண முறைக்கான கால அவகாசம் நீட்டிப்பு !!

773

செட்டாப் பாக்ஸ் மூலம் தமிழக அரசு கேபிள் டிவி சேவையை அளித்து வந்த நிலையில், டிராய் அமைப்பு திடீரென புதிய கட்டண விதிமுறை ஒன்றை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தியது. இதன்படி அடிப்படை கட்டணம் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.153ம், பராமரிப்பு கட்டணம் ரூ.20 என மொத்தம் ரூ.173 செலுத்த வேண்டும். அதனையடுத்து விருப்பப்படும் சேனலுக்குரிய கட்டணங்களை கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஒருசில சேனல்களை தேர்வு செய்தாலே கேபிள் கட்டணம் ரூ.300ஐ தாண்டும் என்றும், முக்கிய சேனல்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் சுமார் ரூ.1000 கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கிற்கும் ஆப்பு வைக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த கால அவகாசம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. நார்மல் டிவிக்களை அமேசான் ஃபயர் ஸ்டிக் போன்ற சாதனங்கள் மூலம் ஸ்மார்ட் டிவிக்களாக மாற்றி ஆன்லைன் மூலம் அனைத்து சேனல்களையும் குறைந்த செலவில் பார்க்கும் வகையில் பலர் மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of