பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை திடீர் பாதிப்பு – சைபர் தாக்குதலா?

111

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களின் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், வாட்ஸ்ஆப் போன்றவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பேஸ்புக்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், புதிய பதிவுகளை பதிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம், பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சேவை விரைவில் சரி செய்யப்படும் எனவும், இது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.