ஆப்பிள் நிர்வாகத்தை அலறவிட்ட சிறுவனுக்கு கல்வியுதவி

322

பேஸ்டைமில் குறைபாட்டைக் கண்டுபிடித்துக் கூறிய 14 வயது சிறுவனுக்கு கல்வி உதவித் தொகைக்காக சன்மானம் வழங்கி பாராட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம் .

ஆப்பிளின் பேஸ்டைம் எனும் வீடியோ காலிங் செயலியில் குரூப் வீடியோ காலிங்கில் ஒருவருக்கு அழைப்பு மேற்கொண்டு அவர் அதை ஏற்கும் முன்பே, தாமாகவே அவரது கேமராவை ஆன் செய்ய வைக்கக் கூடிய குறைபாடு இருந்தது. இதை அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயதான கிராண்ட் தாம்சன் என்ற சிறுவன் கண்டறிந்தார்.

ஐபோனின் பேஸ்டைமில் சிறுவன் தமது சகோதரியை அழைத்து அவர் அழைப்பை ஏற்கும் முன்பே, மூன்றாவது நபரை அழைப்பில் இணைக்கும் வாய்ப்பில் தமது எண்ணையே மீண்டும் உட்செலுத்தி அழைத்தான். இதன் மூலம் சகோதரி போனை எடுக்காமலேயே அவரது கேமரா ஆன் ஆகி வீடியோ காலில் தாமாகவே இணைக்கப்பட்டது.

இதை அவரது தாயிடம் கூறி நிரூபித்ததைத் தொடர்ந்து, அவரது தாய் ஆப்பிள் நிறுவனத்தை எச்சசரித்தார்.இதைக் கண்டறிந்து கூறிய சிறுவனுக்கு இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய் முதல் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை சன்மானம் கொடுத்த ஆப்பிள் நிறுவனம் குறையையும் படிப்படியாக களைந்து வருவதாகக் கூறப்படுகிறது.