சுயேட்சையாக களமிறங்கும் “மதுரை முத்துப்பாண்டி”

753

தனது தனித்துவமான நடிப்பாலும், இயக்கத்தினாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கடந்த சில காலமாக இவர் அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பிரதமருக்கு எதிரான பேச்சுக்களால் அடிக்கடி இவர் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல என்பது போல தற்போது இவரும் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக களம்காணவிருக்கிறார். அதற்கான வேட்புமனுவை இன்று அவர் பெங்களுருவில் அளித்தார். ஆம்ஆத்மி கட்சி இவருக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக சார்பாக பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் பி.சி. மோகன் அவர்களும் இன்று மனுதாக்கல் செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of