நகையை திருடிய போலி சிபிஐ அதிகாரி கைது | Fake CBI officer

379

திருவான்மியூரில் தங்கி படித்து வரும் கல்லூரி மாணவியான கோமதி என்பவர் கடந்த மாதம் திருப்பத்தூர் சென்றபோது பேருந்தில் பயணித்த ஒருவர் கோமதியிடம் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் நகையை அணிந்திருந்தால் யாராவது திருடிச் சென்று விடுவார்கள், பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கூறி அவரை திசை திருப்பியுள்ளார்.

இதையடுத்து கோமதியும் நகையை தனது பையில் வைத்து விட்டு தூங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் எழுந்த பார்த்த கோமதி பையிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் தற்போது சென்னை திரும்பிய கோமதி, இது குறித்து அடையார் துணை ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், போலி சிபிஐ அதிகாரியான ஜோசப் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகையை கைப்பற்றினர்

Advertisement