போலி இ-பாஸ் அச்சடித்து விற்பனை – கணினி மையத்திற்கு சீல்

163

தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் செல்ல 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை இ-பாஸ்கர் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள கணினி மையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, பெரியார் சிலை அருகே இருந்த கணினி மையத்தில் போலி பாஸ், 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கணினி மையத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும், அந்தக் கணினி மையத்தின் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள கணினி மையத்திலும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இதனையடுத்து அந்தக் கணினி மையத்தின் சாவியை மட்டும் காவல்துறையினர் பெற்றுச் சென்றுள்ளனர். தொடர்ந்து இந்த கணினி மையத்தில் ஏதேனும் இ-பாஸ்கல் போலியாக விற்கப்பட்டிருக்கிறது என்ற விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்ரம் ராஜா என்ற நபர் இ-பாஸ் விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்தது. தலைமறைவான விக்மராஜாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.