போலி மதுபானங்கள், எரிசாராயம் மற்றும் மது தயாரிப்பு இயந்திரங்கள் பறிமுதல்

830

காட்பாடி அருகே கடந்த 3 மாதங்களாக அடுக்குமாடி குடியிருப்பில், போலி மதுபானம் தயாரித்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி மதுபானங்கள், எரிசாராயம் மற்றும் மது தயாரிப்பு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட போலி மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காட்பாடி பாரதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குடியிருப்புக்கு சென்ற போலீசார், அங்கிருந்து போலி மதுபானங்கள், எரிசாராயம் மற்றும் மது தயாரிப்பு இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

Advertisement