இதான் உங்க டக்கா ! 20 ஆண்டுக்குப்பின் கைதான போலி விமானி

258
southarica2.3.19

வில்லியம் சாண்ட்லர், இவர் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சொந்தமான ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வில்லியம் இயக்கிய விமானம் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு பயணம் செய்தது அப்போது சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த போது அதிர்வு ஏற்பட்டது.

அப்போது விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் “விமானி இல்லை”. “அதற்கான லைசென்சும் அவர் பெறவில்லை” என தெரியவந்தது.

இவர் விமானி ஆவதற்கு முன்பு இவர் விமான என்ஜினீயராக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க போவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச விமானங்களை இயக்கும் விமானிகள் ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் விமானி லைசென்சை பெறுவது கட்டாயமாகும். இதை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். உடல் தகுதி தேர்வுக்கும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.