ஒரே வரிசை எண்ணில் பல டிக்கெட்..! குழப்பமடைந்த தியேட்டர் நிர்வாகிகள்..! இறுதியில் வெளியான மர்மம்..!

603

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பிகில் திரைப்படம் சிறப்பு காட்சிக்கான ரசிகர் மன்றத்திற்கான டிக்கெட்டுகளை இருவர் விற்பனை செய்துள்ளனர்.

இதனிடையே தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் சிறப்பு காட்சியின்போது, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகமானோர் டிக்கெட்டுகளுடன் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து டிக்கெட்டுகளை சோதனை செய்த போது, பலரிடம் போலி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த மோகன் பாபு, ஆனந்த் ஆகியோர் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், போலி டிக்கெட் அச்சடித்த அச்சக உரிமையாளர் உட்பட மேலும் இருவரை கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of