வாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்! காரணம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!

1444

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதற்காக நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் தேர்தலில் இதுவரை 445 வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் மைக் மோகன் வந்துள்ளார்.

ஆனால் அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள வாக்கு பதிவானது என்ற தகவல் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of