காதலனுடன் ஓடிய பெண்..! – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்..! – பிறகு நேர்ந்த கொடூரம்..!

739

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகளை அழைத்து கொலை செய்த பெற்றோர் தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமனது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் கீதா. இத்தம்பதியினருக்கு நயனா எனும் மகள் உள்ளார்.

நயனாவின் வயது 24. இவர் பெங்களூரு விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு விடுதியில் வசித்து வந்த இவர் 2 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். சுபாஷ் காவல்நிலையத்தில் தன் மகளை காணவில்லை என்று புகாரளித்தார்.


புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நயனாவை பல இடங்களில் தேடினர். இறுதியாக நயனா தன்னுடைய காதலனுடன் வேறொரு விடுதியில் தங்கியிருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளனர்.
தன் மகளின் இருப்பிடத்தை அறிந்த பெற்றோர் அங்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் நயனாவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப மானத்தை காப்பாற்றுவதாக நினைத்து பெற்றோர் மகளை கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of