“மாப்பு.. மாப்பு.. வச்சிட்டான் டா ஆப்பு..” – வடிவேலுவுக்கு வந்த அடுத்த ஆபத்து..! பிரபல நடிகர் பகீர் புகார்..!

1732

தமிழ் சினிமாவில் மிக முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள், இவருக்காகவே ஹிட் அடித்தன. அந்த அளவிற்கு, தமிழ் சினிமாவின் காமெடி உலகில் ஜாம்பவனாக வலம் வந்திருக்கிறார்.

ஆனால், சமீப காலமாக வடிவேலுவுக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், எல்லாம் அவன் செயல் படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.கே. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் என்று ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நானும் நீயும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடிப்பதற்காக, 1 கோடி ரூபாய் பணத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு, படப்பிடிப்புக்கு வர மறுப்பதாகவும், படத்தின் கதையை மாற்ற வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பணத்தை திருப்பி தரவில்லையென்றால், வடிவேலுவின் நடிக்கும் புதிய படங்களை வெளியிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு இடிகளை வாங்கிய வடிவேலுவின் இந்த நிலையை பார்க்கும்போது, மாப்பு வச்சிட்டான் டா ஆப்பு என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

Advertisement