ஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..

1196

நடிகர் வினய், சந்தானம், பிரபு ஆகியோர் நடித்த மிரட்டல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிலா மாண்ட்ரே. இவர் சமீபத்தில், ஜீன்ஸ், மின்னலே, ஜோடி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் மகனை சமீபத்தில், திருமணம் செய்துக்கொண்டார்.

பெங்களூரில் வசித்து வரும் இவர், தனது ஆண் நண்பருடன் நேற்று காரில் வெளியே சுற்றியுள்ளார். வசந்த நகரில் வேகமாக வந்துக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், இருவரும் காரில் வெளியே சுற்றியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of