கொரோனா வைரசுக்கு பலியான பிரபல ஹாலிவுட் நடிகர்

2117

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஆலன் கேர்ஃபீல்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குத்துச்சண்டை வீரராக தனது பயணத்தை தொடங்கிய ஹாலிவுட் நடிகர் ஆலன் கேர்ஃபீல்டு, ஆர்ஜி கேர்ல்ஸ் 69 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார்.

இதையடுத்து பனானா, தி கேன்டிடேட், தி கான்வெர்சேஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர், இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி கடந்த 7-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்த சம்பவம், ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement