சென்னையில் ரவுடி படுகொலை..! மூளையை தட்டில் வைத்து சென்ற கொடூரம்..!

1295

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அறிவழகன் தனது வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, வீட்டில் நுழைந்த சிலர் அரிவாள் மற்றும் கத்தி ஆகிய ஆயுதங்களை கொன்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மூளையை வெளியே எடுத்த அந்த கும்பல், அறிவழகன் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களும் பரவி கொண்டிருக்கிறது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அறிவழகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விறகு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of