அடிபட்ட ரசிகை – நெகிழ்வித்து பரிசளித்த ரோஹித்

684

உலக கோப்பை தொடர் தொடங்கிய நாள் முதலே, ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து விளாசினார். போட்டியின் இறுதியில் ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் சிக்சர் அடித்தபோது ஒருமுறை பந்து, மைதானத்தில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த ரசிகை ஒருவர் மேல் விழுந்தது. இதில் அவர் லேசாக காயமடைந்தார். இதனை கவனித்த ரோகித், போட்டி முடிந்தவுடன் மீனாவை சந்தித்தார்.

மீனாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் சிறிது நேரம் கலகலப்பாக உரையாடிவிட்டு கையெழுத்திட்ட தொப்பி ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of