பிரபல நடிகர் வீட்டின் முன் ரசிகர் தீக்குளிப்பு

395

பிரபல கன்னட ஹீரோ யஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியான ‘கே.ஜி.எஃப்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்து ஹீரோ யஷ் க்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை அளித்து வந்தது.

நடிகர் யஷ் சின்க்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் வந்தது. அவர் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தன் ரசிகர்களை பார்ப்பது வழக்கம். இந்த வருடம் தன் பிறந்த நாளை அவர் பெரிதாக கொண்டாடவில்லை. தன் ரசிகர்களையும் சந்திக்கவில்லை.

இந்நிலையில் அவரின் ரசிகரான ரவி (28)  என்ற கூலி தொழிலாளி ஆன அவர் தன் விருப்பமான நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை பார்க்கமுடியவில்லை. மிகுந்த வருத்ததிற்கு உள்ளானார் ரவி.

இதையடுத்து அவர் வீட்டின் முன் ,பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின் யஷ் வீட்டின் காவலர்கள் தீயை அணைத்து, அவரை மருத்துவமணையில் சேர்த்தனர்.

பின் மருத்துவமணைக்கு வந்த யஷ் ரவியின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் பேசினார். ரவியின் பெற்றோருக்கு ஆறுதல் அளித்தார். பின் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.