இளம் நடிகைக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்.. திக்குமுக்காடிய நடிகை..

941

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை நிதி அகர்வால். இவர், தமிழில், பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக, உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து, புதிய படம் ஒன்றில், நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகை நிதி அகர்வாலுக்கு தமிழகத்தை சேர்ந்த ரசிகர்கள், கோவில் கட்டி, அபிஷேகம் செய்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து பேசிய நடிகை நிதி அகர்வால், தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இதைவிட சிறந்த காதலர் தின பரிசு இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement