ஐயா 8 வழிச்சாலைய கொண்டுவந்தவங்க கூட ஏன் கூட்டணி? – பாமகவிடம் கேள்வி கேட்ட விவசாயியை அரைந்த அமைச்சர்

971

எட்டுவழிச்சாலைக்கு அனுமதியளித்த கட்சியுடன் கூட்டணி ஏன் என பாமக தர்மபுரி வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி எழுப்பிய விவசாயியை அதிமுக அமைச்சர் அரைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.அவருடன் அமைச்சர் செம்மலையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது, ஒரு விவசாயி அன்புமணியிடம்;

” ஐயா..! 8 வழிச்சாலைக்கு அனுமதி கொடுத்த கட்சியோடு கூட்டணி வைத்திருக்கீங்களே… ஏன் ஐயா…? 8 வழிச்சாலை கொண்டு வரும்போது எதிர்த்தீங்களே ஐயா.. நீங்க நடத்துன போராட்டம் என்னய்யா ஆச்சு…? ”

என பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி கேள்வியெழுப்பினார். அப்போது அருகில் நின்ற அமைச்சர் செம்மலை, கேள்வியெழுப்பிய விவசாயியை பளார் என அரைந்தார்.

மேலும் காவல்துறையால் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த விவசாயி படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

8 வழிச்சாலைகுறித்து கேள்வியெழுப்பிய விவசாயியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of