மஹாராஷ்டிராவில், 88 வயதான விவசாயி, 1.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கி அசத்தியுள்ளார்

1021

மஹாராஷ்டிராவில், 88 வயதான விவசாயி ஒருவர்,1.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கி அசத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தயானி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் போகலே. வெகு நாட்களாகவே விலை உயர்ந்த ஜாகுவார் காரை வாங்கவேண்டும் என்பது இவர் கனவாக இருந்தது என கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய 88-வது வயதில் 1.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் XJசலூன் காரை வாங்கி தன் கனவை நினைவாக்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சுரேஷ் போலே, ஊரில் உள்ள அனைவருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட உறையில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடியுள்ளார்.

இந்த இனிப்புகளுக்கு மட்டுமே அவர் 21 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement