கடன் விவகாரம்..! வங்கி முன்பு விவசாயி செய்த பதறவைத்த செயல்..! கோவையில் பரபரப்பு..,!

439

கோவை சங்ககிரி அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. விவசாயம் செய்து வந்த இவர், தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பால்பண்ணை அமைப்பதற்காக இந்தியன் வங்கியில் கடன் பெற்றார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு கடன் பெற்ற பூபதி, அதற்கான வட்டிப்பணத்தை செலுத்தி வந்துள்ளார். பால்பண்னை லாபகரமாக இல்லாததால் பணத்தை திருப்பி செலுத்திட முடிவு செய்துள்ளார்.

தனது பங்கை செலுத்த வங்கிக்கு சென்ற அவரிடம், உங்கள் நண்பர்களின் பணத்தையும் நீங்களே செலுத்த வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பூபதி வங்கி அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of