மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடும் விவசாயிகள்?

563

பிரதமர் மொடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து தெலங்கானாவை சேர்ந்த 50 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தெலங்கானவை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு அதிக விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்ற அங்கு 178 விவசாயிகள் உட்பட மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நிசாமாபாத்தை சேர்ந்த 50 விவசாயிகள் அனைத்திந்திய மஞ்சள் விவசாய சங்கம் சார்பில் போட்டியிட உள்ளனர்.

மோடிக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ள தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மேலும் 50 விவசாயிகளும் அவர்களுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரணாசிக்கு நாளை புறப்பட உள்ள அவர்கள் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

ஒரு வேட்பாளருக்கு 10 உள்ளூர்வாசிகளின் கையெழுத்து தேவை என்பதால் அங்குள்ள விவசாயிகளிடம் ஆதரவு கேட்க உள்ளதாக விவசாய சங்கத்தலைவர் பி.கே. தெய்வசிகாமணி தெரிவித்தார்.

மேலும் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்த பல்வேறு நன்கொடை அளிப்பவர்களிடம் பணம் திரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். வாரணாசியில் அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of