ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது

455

நாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 7-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தியதாக கூறி, போலீசார் நேற்று போராட்ட பந்தலை அகற்றினர்.

மேலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கரியாப்பட்டினம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.